கரூர்

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து ஜூலை 16-இல் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

DIN


மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து வரும் 16-ஆம் தேதி கரூரில் ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கரூர் வடக்கு காந்திகிராமத்தில் ஏஐடியுசி மாவட்ட குழுக்கூட்டம் மாவட்ட துணைத் தலைவர்  ஆர்.அறிவழகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர் கே.கலாராணி, மாவட்டத் தலைவர் சக்திவேல், பொருளாளர் வி.ஜெயராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் ஜிபிஎஸ். வடிவேலன் மாநில குழு முடிவுகளை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், வரும் 16-ஆம் தேதி மாநிலக்குழு முடிவின்படி விவசாயிகளுக்கு பயிர்க் கடன்களை ரத்துசெய்ய மறுத்து,  பெட்ரோல், டீசல் மீது செஸ் வரியை உயர்த்தி அனைத்து விலைகளின் உயர்வுக்கு காரணமான நிதிநிலை அறிக்கையைக்  கண்டித்து கரூரில் பேருந்துநிலைய ரவுண்டானா அருகே உள்ள ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், வாரிய செயல்பாடுகளின் குறைகளைக் கண்டித்தும் வெங்கமேட்டில் ஆகஸ்ட் மாதத்தில் பிரசார இயக்கம் நடத்துவது, மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT