கரூர்

72 வயது முதியவருக்கு சிறுநீர்பை  புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை

DIN

கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பெரியசாமி(72). கடந்த மூன்று மாதங்களாக சிறுநீரில் ரத்தக்கசிவு மற்றும் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்த இவர்,  கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு சிறுநீர் பையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி மருத்துவர் ரோகினிஸ்ரீதர், தலைமை மருத்துவ நிர்வாகி டாக்டர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவர் எஸ்.விஜயசங்கர் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறுகையில், இதுபோன்ற அறுவைச்சிகிச்சை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே செய்யப்படும். ஆனால் இப்போது கரூர் அப்போலோ மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக செய்துள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT