கரூர்

வெளிநாட்டில் வேலை என ரூ.7.5 லட்சம் மோசடி: இளைஞர் கைது

DIN


வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 7.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த ஷாஜகான் மகன் சிராஜ் (25). இவர், தனது கல்லூரி நண்பரான கடவூர் அடுத்த கிழக்குராசப்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மகன் பெரியசாமி(21) என்பவரிடம் தாய்லாந்து நாட்டில் கேட்டரிங் படித்தவர்களுக்கு வேலை உள்ளது எனக்கூறியுள்ளார். இதையடுத்து பெரியசாமி, தனது ஊரைச் சேர்ந்த முத்தன் மகன் செல்வா(22), திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த லூர்துசாமி மகன் ஸ்டீபன்ஜெரால்டு(23) ஆகியோரிடம் தலா ரூ.2.5 லட்சம் என மொத்தம் ரூ.7.5 லட்சம் சிராஜிடம் கடந்த மாதம் 1 ஆம் தேதி கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, விசாவில் கம்போடியா சென்றதும், விசா சுற்றுலா விசா என்பதும் பின்னர் தெரியவந்தது.   மூவரும் சொந்த ஊருக்கு கடந்த 20 ஆம் தேதி திரும்பினர். மூவரும் சிராஜ் மீது பாலவிடுதி போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிந்து சிராஜைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT