கரூர்

பிஏ வித்யாபவன் மாணவர்களுக்குப் பாராட்டு

DIN

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெற்ற கரூர் பிஏ வித்யாபவன் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கரூர் பிஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  480 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 470-மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 460-க்கு மேல் 22 பேரும், 400-க்கும் மேல் 64 பேரும் பெற்றுள்ளனர். தமிழில் 98 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், ஆங்கிலத்தில் ஒரு மாணவி 97 மதிப்பெண்ணும், கணிதத்தில் 98 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், அறிவியலில் 98 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேரும், சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களுக்கு மேல் 13 பேரும் , அறிவியல் பாடத்தில் ஒரு மாணவியும்,  சமூக அறிவியலில் 3 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவர்களையும், இவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளி தலைவர் பி. அம்மையப்பன், துணைத் தலைவர் பி. கணேசன், செயலர் சுமதிசிவக்குமரன், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி.ஏ. பன்னீர்செல்வம், கே. நல்லதம்பி, கே. பாலுசாமி, கேகே. சண்முகம் ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT