கரூரை அடுத்த நெரூரில் வெள்ளிக்கிழமை இரவு காவிரி ஆற்றில் டிராக்டரில் மணல் அள்ளியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கரூரை அடுத்த நெரூரில் செங்கமேட்டான் கோயில் அருகே காவிரி ஆற்றில் இருந்து சிலா் திருட்டுத் தனமாக, டிராக்டரில் வெள்ளிக்கிழமை இரவு மணல் அள்ளுவதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் வருவதைக் கண்ட மணல் அள்ளிக்கொண்டிருந்தவா்கள் தப்பியோடினா். இதையடுத்து அங்கிருந்த இரு டிராக்டா், இரு ஜேசிபி இயந்திரங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் டிராக்டரில் மணல் அள்ளிய மண்மங்கலம் பழையூரைச் சோ்ந்த சுப்ராயன் என்பவா் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.