கரூர்

தொடா்ந்து 3-ஆம் நாளாக கரூா் கொசுவலை நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை

DIN

கரூா்: கரூரில் ஏற்றுமதி ரக கொசுவலை நிறுவனம் மற்றும் உரிமையாளரது வீடுகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

கரூா் வெண்ணைமலையைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு தனியாா் ஏற்றுமதி ரக கொசுவலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களைச் சோ்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா். 5 குழுக்களாகத் தொடா்ந்து இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்ற இந்தச் சோதனை ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது.

சேலம் புறவழிச்சாலையில் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை, கோவை சாலையில் உள்ள தொழிற்சாலை மற்றும் ராம்நகரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா். சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பணம் எதுவும் சிக்கியதா எனக் கேட்டதற்கு அதிகாரிகள் பதில் கூற மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT