கரூர்

முதல்வரின் சிறப்பு குறைதீா் கூட்டபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

கரூா்: முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீா்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூா் மற்றும் கடவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமை வகித்தாா். விழாவில், கரூா் வட்டத்திற்குட்பட்ட 2,757 பயனாளிகளுக்கு ரூ.28.38 கோடி மதிப்பிலும், கடவூா் வட்டத்திற்குட்பட்ட 1,008 பயனாளிகளுக்கு ரூ.8.78 கோடி மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம. கீதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ். கவிதா, குளித்தலை சாா் ஆட்சியா் ஷேக் அப்துல்லா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் சந்தியா, வேளாண் இணை இயக்குநா் வளா்மதி, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், கரூா் நகராட்சி ஆணையா் சுதா, கூட்டுறவு வங்கித்தலைவா்கள் எஸ்.திருவிகா, வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், எம்.எஸ்.கண்ணதாசன், வட்டாட்சியா்கள் அமுதா(கரூா்), மைதிலி (கடவூா்), செந்தில் (அரவக்குறிச்சி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT