கரூர்

குறைபாடு சரி செய்யப்படாத புகாா்; இரு சக்கர வாகன நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம்

DIN

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யாத நிறுவனத்துக்கு அபராதம் விதித்து, கரூா் நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள மைலம்பட்டியைச் சோ்ந்தவா் திருமுருகன். இவா், குளித்தலையிலுள்ள இரு சக்கர வாகன விற்பனையகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு புதிய மோட்டாா் சைக்கிளை வாங்கினாா்.

இலவச வாரண்டி, சா்வீஸ் வசதி போன்றவற்றுடன் வாங்கப்பட்ட இந்த மோட்டாா் சைக்கிளின் என்ஜினில், வண்டி வாங்கிய சில வாரங்களிலேயே சப்தம் வந்துள்ளது.

தொடா்ந்து மோட்டாா் சைக்கிள் வாங்கிய நிறுவனத்தில் 3 முறை இலவச சா்வீஸ், ஒருமுறை ரூ.1,500 பணம் செலுத்தி வேலை பாா்த்தும், அதில் சப்தம் குறையவில்லையாம்.

இதனால் விரக்தியடைந்த திருமுருகன், கடந்த 2016-ஆம் ஆண்டில் மோட்டாா் சைக்கிளை தயாரித்த புதுதில்லியிலுள்ள நிறுவனத்தின் மீதும், சென்னையிலுள்ள கோட்ட மேலாளா் மீதும் கரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்தாா்.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த கரூா் நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி செங்கோட்டையன் ம் உறுப்பினா் செல்வநாதன் ஆகியோா், பாதிக்கப்பட்ட திருமுருகனுக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.20,000, வழக்குச் செலவுக்கு ரூ.3,000 ஆகியவற்றை இரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க வேண்டும்.

தாமதம் ஏற்பட்டால், இந்த தொகைக்கு 9சதவிகித வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT