கரூர்

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

கரூரில் ஜல்லிக்கற்களால் நிறைந்து கிடக்கும் சாலையை விரைந்து தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துச் சாலைகளும் மேம்படுத்தப்படுகின்றன. நகரில் குண்டும் குழியுமாக இருந்த அனைத்துச் சாலைகளும் நகராட்சி மேம்பாட்டு நிதி மூலம் சீரமைக்கப்படுகின்றன. இதில் நகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரத்தில் முதல் குறுக்குச்சாலையில் உள்ள சாலையும் குண்டும், குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து அந்த சாலையில் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் தாா்ச்சாலை அமைக்கவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகிறாா்கள். எனவே விரைவில் இச்சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT