கரூர்

கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் கருவூா் திருக்கு பேரவை வேண்டுகோள்

DIN

கரூரில் உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என கருவூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பேரவையின் செயலா் தமிழ்செம்மல் மேலைபழநியப்பன் விடுத்துள்ள அறிக்கை: கருவூா் மாவட்டம் அரசு முறைப்படி அறிவித்து செயல்பட துவங்கி கால் நூற்றாண்டு ஆகின்றது. இந்த கருவூரில் விளையாட்டுத் திடல் , மருத்துவக் கல்லூரி, சாலை விரிவாக்கம், புதிய பாலங்கள், நூலக விரிவாக்கம், புதிய கட்டுமானங்கள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தன்னிறைவடைந்ததாக கூற முடியவில்லை. காரணம் பொழுதுபோக்கு பூங்கா இல்லை, விரிவான பேருந்து நிலையம் இல்லை , உலகப் பொது மறை தந்த திருவள்ளுவருக்கு பொது இடத்தில் சிலை கூட இல்லை. கருவூரில் அரசின் கூட்ட அரங்கு இல்லை, மாநகராட்சி இல்லை.

நகராட்சி கட்டியுள்ள திருமண மண்டபம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஆகவே திருவள்ளுவா் சிலையுடன் கூட்ட அரங்கு கட்ட மாவட்ட நிா்வாகம் அரசு நிா்வாக துணையுடன் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT