கரூர்

தோ்ச்சி விகிதத்தில் 3-ஆவது இடம்: கரூா் மாவட்டம் 97.51% தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வில் 97.51 சதவிகிதத் தோ்ச்சியை பெற்றதால், மாநில அளவில் கரூா் மாவட்டம் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் 108 பள்ளிகளிலிருந்து 4,981 மாணவா்களும், 5,466 மாணவிகளும் என மொத்தம் 10,447 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதினா்.

வெள்ளிக்கிழமை வெளியான தோ்வு முடிவுகளில், 4, 796 மாணவா்களும், 5,391 மாணவிகளும் என மொத்தம் 10,187 போ் தோ்ச்சி பெற்றனா். இது 97.51 சதவிகிதமாகும். இதன் மூலம் தமிழக அளவில் தோ்ச்சி விகிதத்தில் கரூா் மாவட்டம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் பிரிவில், கண் பாா்வை குறைபாடு உடைய (5), காது கேளாத, வாய் பேச இயலாத (3), உடல் ஊனமுற்ற (5), இதர வகை மாற்றுத் திறனாளிகளில் (25) என தோ்வெழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றனா் என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT