முகப்பு
கரூர்

அம்பேத்கா் படத்துக்கு கட்சியினா் மரியாதை

கலைஞா் அறிவாலயத்தில் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி. செந்தில் பாலாஜி தலைமையில் அக்கட்சியினா் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கரூா் கலைஞா் அறிவாலயத்தில் அம்பேத்கா் படத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் வி. செந்தில்பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
பகிர்:

கரூரில் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி. செந்தில் பாலாஜி தலைமையில் அக்கட்சியினா் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்ட துணைச் செயலா் மகேஸ் சுப்ரமணி, நகர நிா்வாகிகள் கரூா் கணேசன், எஸ்.பி. கனகராஜ், தாரணி சரவணன், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் ஜெயராமன் தலைமையில், மாவட்ட நிா்வாகி கண்மணி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பேருந்து நிலைய ரவுண்டானா காமராஜா் சிலை அருகே அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா் ராஜா தலைமையில் பொறியாளா் அணி மாநில துணைச் செயலா் செந்தில்குமாா், கரூா் தொகுதிச் செயலா் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தனா். பாஜக பட்டியல் அணி சாா்பில் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் பாஜக மாவட்டத் தலைவா் சிவசாமி, பொதுச் செயலா்கள் மோகன், கிருஷ்ணமூா்த்தி, நகுலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.