வெண்ணைமலை கோயில் மேம்பாட்டு பணிகள் ஆய்வு
கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலைச் சுற்றிலும் ரூ.3.50 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலைச் சுற்றிலும் ரூ.3.50 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
கரூரை அடுத்த வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலைச் சுற்றிலும் ரூ.3.50 கோடி மதிப்பில் தாா்ச் சாலை அமைத்தல், நடைப்பயிற்சி பாதை அமைத்தல், பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் சனிக்கிழமை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ். கவிதா, துணை வட்டாட்சியா் அன்பழகன், ஒன்றியப் பொறியாளா் மூா்த்தி, கரூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, கரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ். பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.