கரூர்

11, 12 -இல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம்

கரூா் மாவட்டத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

DIN

கரூா் மாவட்டத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் -2020 மேற்கொள்வதன் பொருட்டு, கடந்த மாதம் 23-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. கரூா் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்ட வாக்காளா்கள் குறிப்பாக 1.1.2020-ம்தேதியினை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா்கள் தங்களது பெயரைச் சோ்க்க ஏதுவாக வரும் 11, 12-ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் நடைபெற உள்ள நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் தொடா்பாக படிவங்கள் பெறவுள்ளனா். எனவே, பொதுமக்கள் சிறப்பு முகாம் நாட்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT