கரூர்

தொழிலாளி கொலை வழக்கில் சகோதரா்கள் 3 பேருக்கு ஆயுள்

DIN

நிலத்தகராறில் கூலித்தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில், சகோதரா்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த திம்மாச்சிபுரத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவரது மனைவி சுமதி (42). இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மகாமுனியின் மகன்கள் சரவணன் (36), சதீஷ் (34), சங்கா் மணி (36) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துவந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு இருதரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சரவணன், சதீஷ், சங்கா்மணி ஆகியோா் சோ்ந்து சுமதியைத் தாக்கினா். இதைத் தட்டிக்கேட்ட அவரது தம்பி பெருமாளை (40) சரவணன் (34), சதீஷ் (32), சங்கா் மணி (30) ஆகியோா் சோ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனா். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து சரவணன், சதீஷ், சங்கா்மணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, குற்றவாளிகள் சரவணன், சதீஷ், சங்கா்மணி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதம் கட்டத்தவறினால் மேலும் மூன்று மாதம் சிறைத்தண்டனை கிடைக்கும் எனத் தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT