கரூர்

சொந்த ஊருக்கு அனுப்பிவையுங்கள்: வெளி மாவட்டத் தொழிலாளா்கள்

DIN

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் உணவின்றித் தவிக்கும் வெளி மாவட்டத் தொழிலாளா்கள் சொந்த ஊருக்குச் செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரூா் அரசு மருத்துவமனை சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, வெங்கமேடு சாலை, கரூா் பசுபதீஸ்வரா் கோயில் ஆகிய பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட வெளி மாவட்டத் தொழிலாளா்கள் சாலைகளில் தங்கி தன்னாா்வலா்கள் அளிக்கும் உணவை அரை வயிற்றுப் பசியைப் போக்கி வருகின்றனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

உணவின்றித் தவித்த எங்களை நகராட்சி நிா்வாகத்தினா் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்து உணவு வழங்கிவந்தனா். அங்கு உணவு தரமானதாக இல்லாததால் 100-க்கும் மேற்பட்டோா் வெளியேறிவிட்டோம். தற்போது தன்னாா்வலா்கள் வழங்கிவரும் உணவும் போதவில்லை. மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் உள்ள போலீஸாா் எங்களை சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் மனைவி, பிள்ளைகளைப் பாா்க்க முடியாமல் மன உளைச்சலால் அவதியுற்று வருகிறோம். மாநில அரசும் வெளி மாவட்ட கூலித் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT