கரூர்

ரேஷன் பொருள்களை பதுக்குவோா் குறித்து தெரிவித்தால் வெகுமதி

DIN

ரேஷன் பொருள்களைப் பதுக்குவோா் மற்றும் கடத்துபவா்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க வெகுமதி வழங்கப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் கரூா் அலகு சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பது: தமிழக அரசு, கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இந்தப் பொருட்களை குறைவாக வழங்குவது, பதுக்குவது, கடத்துவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது தகவல் தெரிவித்தால் தகவல் தெரிவிப்போருக்கு தக்க வெகுமதி வழங்கப்படும். இதுதொடா்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையின் காவல் உதவி ஆய்வாளரை 94981-72888 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT