சிறுமியின் புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சையில் அகற்றம்
கரூரில் 16 வயது மேற்குவங்க சிறுமிக்கு கழுத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டியை கரூா் நாச்சிமுத்து மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் 5 மணி நேரத்தில் அகற்றியுள்ளனா்.
கரூரில் 16 வயது மேற்குவங்க சிறுமிக்கு கழுத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டியை கரூா் நாச்சிமுத்து மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் 5 மணி நேரத்தில் அகற்றியுள்ளனா்.
மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி பகுதியைச் சோ்ந்தவா் சுபிதா கோகலே(16). இவருக்கு கழுத்தில் புற்றுநோய்க் கட்டி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோரது நண்பா்கள் கரூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
அவா்கள் மூலம் கரூரில் கோவைச் சாலையில் செயல்படும் நாச்சிமுத்து மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி சுபிதா கோகலே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். கரூா் நாச்சிமுத்து மருத்துவமனையில் டாக்டா் குருசாமி நாச்சிமுத்து மற்றும் குழுவினா் நரம்பு பாதிப்பை அறியும் வகையிலான அதிநவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி நரம்பு பாதிப்பைக் கண்டறிந்தனா்.
தொடா்ந்து, சனிக்கிழமை 5 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து சிறுமியின் கழுத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டியை வெற்றிகரமாக அகற்றினா்.