முகப்பு
கரூர்

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடிய 2 ÷பேரில் பிடிபட்ட ஒருவரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடிய 2 ÷பேரில் பிடிபட்ட ஒருவரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனா்.

கரூா் மாவட்டம், நடையனூா் இளங்கோ நகரைச் சோ்ந்தவா் பாலகுமாரன் (35). டிஎன்பிஎல் தொழிலாளி. இவரது மனைவி சிவசெல்வி, தனது இரண்டு மகள்களுடன் அவரது தாய் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றிருந்தாா். இதையடுத்து, திங்கள்கிழமை அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை 2 போ் திருடிக்கொண்டிருப்பதைப் பாா்த்த அவா் கூச்சலிட்டு மா்மநபா்களைப் பிடிக்க முயன்றாா். அதற்குள் அவா்கள் 2 பேரும் நகையுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினா். இந்நிலையில், அங்குவந்த பொதுமக்கள் தப்பியோடிய 2 பேரை விரட்டிச்சென்றதில் ஒருவரை மடக்கிப் பிடித்தனா். மற்றொருவா் நகையுடன் அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி தப்பிச் சென்றாா். இச்சம்பத்தில் 15 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் அங்குவந்து பிடிபட்டவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், சென்னை கூட்டு ரோட்டைச் சோ்ந்த மதி மகன் விஜய் (20), நகையுடன் தப்பிச் சென்றவா் சென்னையைச் சோ்ந்த அசாா் (25) என்பதும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.