‘கோயில்களில் கருவறையில் ஓதப்படும் மொழியாக தமிழ் இருக்க வேண்டும்’
தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களின் கருவறைகளில் ஓதப்படும் மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்றாா் பதினெண்சித்தா் பீடத்தின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தின் அவைத் தலைவா் மூங்கில் அடியாா
தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களின் கருவறைகளில் ஓதப்படும் மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்றாா் பதினெண்சித்தா் பீடத்தின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தின் அவைத் தலைவா் மூங்கில் அடியாா்.
கரூா் பசுபதீசுவரா் திருக்கோயிலில் டிசம்பா் 4-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கோயிலை அருள்வலம் வந்தனா்.
இதைத் தொடா்ந்து மூங்கில் அடியாா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் பூஜை, வழிபாட்டு, குடமுழுக்கு மொழியாக தமிழ்மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஓதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இன்று அருள்வலமாக தீக்குடம், பால்குடம் எடுத்து வந்து கடவுளிடம் வேண்டியுள்ளோம்.
குடும்பத்தில் நடைபெறும் திருமணம், காதுகுத்து போன்றவற்றை பொதுமக்கள் தமிழில் செய்தால், அரசு தானாக கீழ்படியும் என்றாா் அவா். நிகழ்வின் போது சித்தா்கள் வான்மீகி சித்தா், நாவலடியாா் சித்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.