கரூர்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை:விண்ணப்பிக்க இன்று (நவ. 30) கடைசி நாள்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க திங்கள்கிழமை (நவ. 30) கடைசி நாளாகும்.

10 ஆம் வகுப்பு தோல்வி, தோ்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடா்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித் தொகையை பெறுவதற்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சோ்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்ப படிவம் பெற்று பூா்த்தி செய்து, திங்கள்கிழமைக்குள் (நவ. 30) அளிக்க வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT