கரூர்

தலைக்கவசம் அவசியம் விழிப்புணா்வுப் பேரணி

DIN

கரூா்/அரியலூர்: கரூர் மற்றும் அரியலூரில் காவல் துறை சாா்பில் தலைக்கவம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

கரூா் நகர காவல்நிலையத்தில் தொடங்கிய பேரணியை நகரக் காவல் துணை கண்காணிப்பாளா் முகேஷ் ஜெயக்குமாா், கரூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணி நகர காவல்நிலையம் முன்பு தொடங்கி, சா்ச் காா்னா், திண்ணப்பா திரையரங்கம், பேருந்துநிலைய ரவுண்டானா, கோவைச்சாலை, திருக்காம்புலியூா் ரவுண்டானா வழியாக ஜவஹா் பஜாரை அடைந்து கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு முடிவடைந்தது.

பேரணியில் கரூா் நகர காவல் ஆய்வாளா் உதயகுமாா், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

அரியலூா்

கல்லங்குறிச்சி சாலையில், ஆயுதப்படை காவலா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் ச. ரத்னா. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT