முகப்பு
கரூர்

வேலாயுதம்பாளையத்தில் 2 கிலோ குட்கா பறிமுதல்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 2 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 2 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பான் பராக் மற்றும் போதை புகையிலை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீசாா் சம்பவ இடத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட பெட்டிக்கடையை ஆய்வு செய்தனா்.

அப்போது அண்ணா நகா் மேல்வீதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் வீராச்சாமி(32), ரவுண்டானா பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் மணி(54) ஆகியோரிடம் இருந்து 2 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.