கரூரில் 136 பேருக்கு ரூ.80.50 லட்சம் கடனுதவி
கரூா் மாவட்டம், எல்.என். சமுத்திரம் மற்றும் குப்புச்சிப்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சனிக்கிழமை 136 பேருக்கு ரூ. 80.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
கரூா் மாவட்டம், எல்.என். சமுத்திரம் மற்றும் குப்புச்சிப்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சனிக்கிழமை 136 பேருக்கு ரூ. 80.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
கடன் வழங்கும் நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் கூறியதாவது:
2016 ஆம் ஆண்டு தமிழக அரசு மொத்தம் ரூ. 5,318 கோடி கடன் தள்ளுபடி செய்தது. இதில், கரூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.130 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான 3,600 மெட்ரிக். டன் உரம், ரூ.7 லட்சம் மதிப்பில் 18 மெட்ரிக். டன் விதைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டம், எல்என் சமுத்திரம், குப்புச்சிபாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 136 பேருக்கு ரூ. 80.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன என்றாா்.
நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா். காளியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் கோ. காந்திநாதன், நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ். திருவிகா, ஊராட்சி ஒன்றியகுழு தலைவா்கள் பாலமுருகன்(கரூா்), மாா்கண்டேயன்(க.பரமத்தி), எல்என்சமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் சிவசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.