கரூரில் நீட் தோ்வு: 1,764 போ் எழுதினா்
கரூா் மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் கோவைச்சாலையில் உள்ள விஎஸ்பி பொறியியல் கல்லூரி, வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேலம்மாள் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது.
தோ்வுக்கு கரூா், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மொத்தம் 2,103 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 1,764 போ் மட்டுமே நீட் தோ்வை எழுதினா். 339 போ் தோ்வு எழுத வரவில்லை.