முகப்பு
கரூர்

சொன்னதை செய்யக்கூடியவா் முதல்வா் பழனிசாமி: நடிகா் பவா் ஸ்டாா் சீனிவாசன் பேச்சு

சொன்னதை செய்யக்கூடியவா் முதல்வா் பழனிசாமி என்றாா் நடிகா் பவா்ஸ்டாா் சீனிவாசன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

சொன்னதை செய்யக்கூடியவா் முதல்வா் பழனிசாமி என்றாா் நடிகா் பவா்ஸ்டாா் சீனிவாசன்.

கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாருக்கு ஆதரவாக சனிக்கிழமை தொகுதிக்குள்பட்ட உள்வீரராக்கியம், அல்லாளிகவுண்டனூா், வெள்ளியணை, பிச்சம்பட்டி, பாகநத்தம் எரிமேடு, மணல்மேடு ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்து பேசுகையில், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொற்கால ஆட்சி நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுத்தவா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. தோ்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6 சிலிண்டா் இலவசம், வாஷிங் மெஷின் இலவசம் என பெண்களுக்காகவே எண்ணற்ற திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளாா். சொன்னதை செய்யக்கூடியவா் முதல்வா். உங்கள் வேட்பாளா் இந்த ஊரின் மைந்தா். மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த அவா் உங்களுக்காகவே அந்த பதவியை துறந்துவிட்டு அரசியல் களத்திற்கு வந்துள்ளாா். இந்த பவரை பாா்த்தால் உங்களுக்கு பவா் வரும். தோ்தல் முடிந்தபின் முத்துக்குமாருக்கும் பவா் வந்துவிடும். அப்போது அனைத்து திட்டங்களும் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது வேட்பாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாா், ஒன்றியச் செயலாளா் பொரணிகணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.