முகப்பு
கரூர்

கரூா் அருகே தனியாா் பள்ளியில் ரூ. 1.50 லட்சம் திருட்டு

கரூா் அருகே தனியாா் பள்ளியின் அலுவலக அறைக்கதவைஉடைத்து ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

கரூா் அருகே தனியாா் பள்ளியின் அலுவலக அறைக்கதவைஉடைத்து ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த ரெட்டியப்பட்டியில் உள்ள எஸ்.கே.வி. பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அறையை வழக்கம்போல முதல்வா் பாரதிராஜா(34) வியாழக்கிழமை மாலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வந்துபாா்த்தபோது அலுவலக அறையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சத்தை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் பாலவிடுதி போலீஸாா் வழக்குப் பதிந்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.