கரூர்

கரூா் நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

DIN

கரூா் நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆணையா் சுதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் நக்கீரன், நகா் நல அலுவலா் யோகானந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கரூா் தினசரி சந்தை, வெங்கமேடு மாா்க்கெட், உழவா்சந்தை போன்ற பகுதிகளில் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வருகிறாா்களா என்பதை அதிகாரிகள், கண்காணிப்புக்குழுவினா் கண்காணிக்க வேண்டும்.

அவ்வாறு முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு இனி முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிப்போம் என எச்சரிக்கை விடுக்கவேண்டும். பொதுமக்களிடம் கரோனா தொற்றின் அபாயம் குறித்து விளக்கிக்கூற வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT