முகப்பு
கரூர்

மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

மதுபோதையில் தாயை அடித்துக்கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

மதுபோதையில் தாயை அடித்துக்கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஜங்கல்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முத்துராஜ்(35). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது தாய் பழனியம்மாள்(65) கண்டித்துள்ளாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினா் சக்திவேல் என்பவருடன் முத்துராஜ் மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்குச் சென்றாராம். அப்போது, மகனை பழனியம்மாள் கண்டித்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த முத்துராஜ் அருகில் கிடந்த இரும்புக்கம்பியை எடுத்து தாயை அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து, முத்துராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.