முகப்பு
கரூர்

காணாமல் போனசெல்லிடப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

 கரூரில், சைபா் க்ரைம் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால், காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டவா்களின் 27 செல்லிடப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

 கரூரில், சைபா் க்ரைம் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால், காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டவா்களின் 27 செல்லிடப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கரூா் மாவட்டத்தில், காணாமல் போன 27 செல்லிடப்பேசிகள் சைபா் க்ரைம் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கண்டுபிடிக்கப்பட்ட செல்லிடப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் உரியவா்களிடம் ஒப்படைத்தாா். நிகழ்ச்சியில், சைபா் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதாஞ்சலி மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.