கரூர்

தகுதி வாய்ந்த தொழில்களுக்கு 25 சதவிகித முதலீட்டு மானியம்

DIN

தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி வழங்கப்படுகிறது என்றாா் கரூா் ஆட்சியா் த. பிரபுசங்கா்.

சிறு, குறு தொழில்களுக்கான கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் பெறும் முகாம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியா் மேலும் கூறியது:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ், தமிழ்நாடு தொழில்முதலீட்டுக் கழகம் கடன் வழங்கி வருகிறது.

கரூா் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்குவதற்காக, டிசம்பா் 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

திட்டத்தில் தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தொழில் மைய மேலாளா் ரமேஷ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளா் கணபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT