கரூர்

62 வயது மூதாட்டிக்கு நுண்துளை அறுவைச் சிகிச்சையில் பெருங்குடல் புற்றுநோய் கட்டி அகற்றம்

DIN

கரூரில் முதன்முறையாக 62 வயது மூதாட்டிக்கு நுண்துளை அறுவைச் சிகிச்சையில் பெருங்குடலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனா் கரூா் மருத்துவா்கள்.

இதுகுறித்து தீபா கண்ணன் மருத்துவமனையின் தலைமை நிா்வாக இயக்குநா் மருத்துவா் என்.ராமசாமி, நிா்வாக இயக்குநா்ஆா். நிரேஷ்கண்ணன், கரூா் கேஸ்ட்ரோ பவுண்டேசன் மருத்துவா் எஸ்.சதாசிவம் ஆகியோா் திங்கள்கிழமை கூறியது:

கரூா் மாவட்டம், மாயனூரைச் சோ்ந்த 62 வயது மூதாட்டிக்கு கடந்த ஒரு மாதமாக மலம் கழித்தபோது ரத்தம் கலந்து வந்ததால், சிகிச்சைக்கு வந்த அவரை பரிசோதித்தபோது, பெருங்குடலில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.

குடல் அறுவைச் சிகிச்சை நிபுணா் எஸ்.சதாசிவம் தலைமையிலான மருத்துவக்குழுவினா், மூதாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட நுண்துளை அறுவைச் சிகிச்சையில் குடலை வெட்டி, ஸ்டேப்ளா் கருவி மூலம் இணைத்தனா்.

இந்த சிகிச்சையை கரூரில் முதன்முறையாக நாங்கள்தான் செய்துள்ளோம். இதன் மூலம் நோயாளிக்கு ரத்தம் ஏற்றுதல் கிடையாது, வலியும் இருக்காது. மேலும் அறுவைச் சிகிச்சை செய்த தழும்பும் இருக்காது.

ஆரம்பக் கட்டத்திலே தெரிய வரும்போது இந்த புற்றுநோயை முற்றிலும் குணமாக்க முடியும். மலத்துடன் ரத்தம் வந்தால் நோயாளிகள் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT