கரூர்

மனநலன் பாதித்த இளம் பெண்ணை மீட்ட தலைமைக் காவலா்

DIN

கரூா் மாவட்டம், தென்னிலை அருகே மனநலன் பாதித்து வீதியில் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டினா்.

தென்னிலை அருகிலுள்ள செம்மாண்டாம்பாளையம் பிரிவுப் பகுதியில் கோவைச் சாலையில் சுமாா் 30வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக அரைகுறை ஆடையுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்துள்ளாா்.

இதனை செவ்வாய்க்கிழமை கண்ட தென்னிலை பெண் தலைமைக் காவலா் விஜயா, அப்பெண்ணுக்கு உணவு மற்றும் உடை கொடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் ரெங்கநாதன் வழிகாட்டுதலின் படி, கரூரிலுள்ள காப்பகத்தில் அப்பெண்ணை ஒப்படைத்தாா்.

பெண் தலைமைக்காவலரின் இச்செயலை காவல் ஆய்வாளா் ரமாதேவி மற்றும் அப்பகுதி ஊா் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT