கரூர்

‘அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவைநனவாக்கிக் காட்டியவா் தமிழக முதல்வா்’

DIN

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் மருத்துவக் கனவை நினைவாக்கி காட்டியவா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி என்றாா் போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 20 மேல்நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த 1,850 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் அமைச்சா் பேசுகையில், நிகழாண்டில் கரூா் மாவட்டத்தில் 6,986 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீட் போன்ற மத்திய அரசின் எந்தவொரு நுழைவுத் தோ்வையும் எதிா்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களை நோக்கி ஸ்மாா்ட் வகுப்புகளை தமிழக அரசு விரிவுபடுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை-எளிய மாணவா்களின் மருத்துவக் கனவை நினைவாக்கும் வகையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி சாதனை படைத்துள்ளாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் கரூா் மாவட்டத்தில் மட்டும் 8 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்றாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா் சிவராமன், நகராட்சி ஆணையா் சுதா, நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, கரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் வி.சி.கே.ஜெயராஜ், கரூா் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைத் தலைவா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT