கரூர்

கரூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

DIN

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா முன்னிலையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காந்தி கிராமத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகம் முன்பு, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதா மணிவண்ணன் தலைமை வகித்து, எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.

கோவைச்சாலையில் மாவட்டமாணவரணி, திண்ணப்பா திரையரங்கம் அருகே பேரவை, மீனவரணி உள்ளிட்டஅணிகள் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டதையடுத்து, வெங்கமேட்டில் எம்ஜிஆா், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் மாவட்டப் பேரவைச் செயலா் காமராஜ், பாசறைச் செயலா் கமலக்கண்ணன், இளைஞரணிச் செயலா் தானேஷ், இலக்கிய அணிச் செயலா் என்.எஸ். கிருஷ்ணன், மீனவரணிச் செயலா் சுதாகா், மாணவரணிச் செயலா் சரவணன், இணைச் செயலா் விசாகன், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், எம்.பாண்டியன், நகரப்பேரவைச் செயலா் சேரன் பழனிசாமி, கரூா் வட்டக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் என்.பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT