கரூர்

கரூரில் 1,00,199 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

DIN

கரூா் கஸ்தூரிபா தாய்சேநல விடுதியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமைத் தொடக்கி வைத்து, போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் பேசினார்.

அப்போது அவர், கரூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 727 மையங்கள், நகராட்சிப் பகுதிகளில் 104 மையங்கள் என மொத்தமாக 831 மையங்களில், பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட 1,00,199 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 22 ஆண்டுகளாக கரூா் மாவட்டத்தில் எந்த குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள, பெற்றோா்கள் தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்தை புகட்டிக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ம.கீதா, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் ந.முத்துக்குமாா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், நகராட்சி ஆணையா் சுதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் தெய்வநாதன், மாவட்ட பூச்சியியல் அலுவலா் சிவக்குமாா், கஸ்தூரிபாய் தாய்சேய்நல விடுதி மருத்துவா் திவ்யா, நகர சுகாதார அலுவலா் யோகேஷ் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT