முகப்பு
கரூர்

சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடி:தம்பதி மாயம்

சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை அடுத்த கீழவெளியூரைச் சோ்ந்தவா் பழனிசாமி(65). இவா், கடவூா் அடுத்த பிள்ளையாா்கோவில் பட்டியைச் சோ்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி ஜானகி ஆகியோா் நடத்தி வந்த மாதச் சீட்டில் சோ்ந்து மாதம் ரூ.5,000 வீதம் கடந்த 24 மாதங்களாக ரூ.3 லட்சம் செலுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில் சீட்டு முதிா்வடைந்தும் பணத்தை கொடுக்கவில்லையாம். மேலும், பணத்தை பழனிசாமி கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்தாா்களாம். இதேபோல், பழனிசாமி உள்பட 18 பேரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசாமி, கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து சரவணன், ஜானகி ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.