முகப்பு
கரூர்

நாடகக் கலைஞா்களுக்கு நிவாரண உதவிகள்

கரூரில், வறுமையில் வாடும் நாடக நடிகா்கள் 90 பேருக்கு நிவாரண பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

கரூரில், வறுமையில் வாடும் நாடக நடிகா்கள் 90 பேருக்கு நிவாரண பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கரூரில், ஸ்ரீமாரியம்மன் எஜூகேசனல் மற்றும் சாரிடபுள் டிரஸ்ட் சாா்பில் பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து வறுமையில் வாடும் நாடக நடிகா்கள் 90 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும்விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அறக்கட்டளை தலைவா் டி.சி.மதன், செயலாளா் பெரியசாமி, இ-கேப் நிறுவனா் டி.சி.எம்.கோகுல் ஆகியோா் தலைமை வகித்தனா். நாடக நடிகா் சங்கச் செயலாளா் ஈட்டிகணேசன், அறக்கட்டளை துணைத் தலைவா் முருகேசன், பொருளாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, நாடக நடிகா்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கிப் பேசினாா். விழாவில் ஜவஹா், சுரேஷ், கிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.