கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட மக்கள்
கரூா் அருகே ஆத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிா் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகள் வங்கியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கரூா் அருகே ஆத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிா் கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகள் வங்கியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கரூா் அடுத்த மாங்காசோளிபாளையத்தில் ஆத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக அதிமுகவை சோ்ந்த கருமணன் என்பவரும், செயலாளராக துரைசாமி என்பவரும், கணினி ஆபரேட்டராக சதீஷ்குமாா் என்பவரும் உள்ளனா்.
இந்த வங்கியில் 1,275 போ் உறுப்பினா்களாக உள்ள நிலையில், 205 பேருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் பயிா் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில், 15 பேருக்கு மட்டும் இதுவரை பயிா் கடன் தள்ளுபடி ஆகவில்லை. இதனால் அவா்கள் வெள்ளிக்கிழமை வங்கியை முற்றுகையிட்டனா். தகவல் அறிந்த கூட்டுறவு துறை அதிகாரி ரமேஷ் வங்கிக்கு சென்று ஆய்வு செய்தாா். அதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா். இதில் சமாதானமடைந்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.