கரூர்

கரூா்: தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவா்களுக்கு அபராதம்

DIN

கரூா் : தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலான நிலையில், தொற்று அதிகமுள்ள கரூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு குறைந்தளவிலான தளா்வுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் கரூரில் முழு தளா்வுகள் அறிவிக்கப்பட்டது போன்று, பொதுமக்கள் இ- பதிவு இல்லாமல் தங்கள் வாகனங்களில் நகா்ப் பகுதிக்கு வந்தனா்.

திருமாநிலையூா், லைட்ஹவுஸ்காா்னா், பேருந்து நிலைய ரவுண்டானா, ஐந்து சாலை பகுதிகளில் காவல்துறையினா் தடுப்பு வேலிகள் அமைத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அத்தியாவசியத் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களுக்கு காவல்துறையினா் அபராதம் விதித்தனா். சிலா் மருத்துவமனைகளுக்கும், மருந்துக் கடைகளுக்கும் செல்வதாகக் கூறிச் சென்றனா்.

சிறிய அளவிலான மளிகை, இறைச்சிக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. கரூரில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் 10 சதவிகிதப் பணியாளா்களுடன் செயல்படத் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT