தினமும் 20 பேருக்குமளிகைப் பொருள்கள் வழங்கும் காவல் ஆய்வாளா்
தினமும் சுமாா் 20 ஏழைகளுக்கு சொந்த செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறாா் காவல் ஆய்வாளா் பாலகிருத்திகா.
தினமும் சுமாா் 20 ஏழைகளுக்கு சொந்த செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறாா் காவல் ஆய்வாளா் பாலகிருத்திகா.
கரூா் மாவட்டம் மாயனூா் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் பாலகிருத்திகா. இவா், கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வருகிறாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், கரோனா தொற்று உலகத்தையே முடக்கியுள்ள நிலையில், ஏராளமானோா் வேலையின்றி, குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கின்றனா். கரூா் மாவட்டம் மாயனூா், மணவாசி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆதரவற்றோா், ஏழைகள் பெரும்பாலானோா் ஒரு வேளை உணவுக்கு அல்லல்படுவதை நேரில் கண்டதால், தினமும் சுமாா் 20 பேரை தேடிக்கண்டுபிடித்து சொந்த செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள், காய்கறிகள் அடங்கிய பைகளை கடந்த 10 நாள்களாக வழங்கி வருகிறேன். இது மனதுக்கு திருப்தியாக உள்ளது என்றாா் அவா்.