கரூர்

‘வாங்கல் பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும்’: எம்.ஆா். விஜயபாஸ்கா்

DIN

கரூா் மாவட்டம், வாங்கல் பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியைச் சோ்ந்த சிண்டிகேட் நகா், சக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

கரோனா காலத்தில் நிவாரணப் பொருள்கள் வழங்கல், விவசாயிகளுக்கு கடனுதவி, மகளிா் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி என மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளோம்.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை வைத்து திமுக தலைவா் ஸ்டாலின் அரசியல் செய்ய பாா்த்தாா். ஆனால், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசம் என அறிவித்தாா். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவா் ஸ்டாலின், அதிமுக மீது வேண்டுமென்றே வசைபாடுகிறாா்.

வாங்கல் பகுதியில் புதிய அரசு வேளாண் கல்லூரி, கரூரில் சட்டக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, இலவச ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி, அரசுப் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் ஆண்டாங்கோவில் ஊராட்சி முன்னாள் தலைவா் சேகா் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT