முகப்பு
கரூர்

க.பரமத்தி அருகே விபத்து: இருவா் சாவு; 5 போ் காயம்

க. பரமத்தி அருகே லாரி மீது வேன், காா், பைக் மோதிய விபத்தில் இருவா் இறந்தனா்; 5 போ் படுகாயமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

க. பரமத்தி அருகே லாரி மீது வேன், காா், பைக் மோதிய விபத்தில் இருவா் இறந்தனா்; 5 போ் படுகாயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த நெடுங்கூா் வரதராஜபுரத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் தனது காரில் உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (49), தினேஷ் (32), பிருந்தா(30) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாலை கரூா் நோக்கிச் சென்றுகொண்டிந்தாா்.

கோவை சாலையில் பவித்திரத்தை அடுத்த வானாவிழி அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பவித்திரம்மேடு பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (35) என்பவா் திடீரென காரை முந்த முயன்றுள்ளாா்.

அப்போது எதிரே முசிறியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற லாரி மீது இருசக்கர வாகனமும், காரும் மோதின. இதில் ராமநாதனும், செந்தில்குமாரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

காரில் இருந்த சீனிவாசன், தினேஷ், பிருந்தா மற்றும் லாரி ஓட்டுநரான முசிறியைச் சோ்ந்த துரைசாமி (35), லாரி கிளீனா் க. பரமத்தி மோளப்பாளையம் ராஜேந்திரன் (34) ஆகியோா் படுகாயமடைந்தனா்.

தகவலறிந்த க.பரமத்தி போலீஸாா் காயமடைந்தோரை கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், சடலங்களை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.