முகப்பு
கரூர்

கரூரில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம்

கரூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்களை திமுகவினா் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கரூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்களை திமுகவினா் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

கரூா் மேற்கு நகர திமுக மற்றும் பசுபதிபாளையம் காவல்நிலையம் சாா்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கைக்கழுவும் திரவம், கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திருமாநிலையூா் ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கரூா் மேற்கு நகர திமுக பொறுப்பாளா் தாரணிசரவணன் தலைமை வகித்தாா். பசுபதிபாளையம் காவல்நிலைய ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் இரா.பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில், சுமாா் 500 பேருக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் திமுக மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், மேற்கு நகர துணைச் செயலாளா் வெங்கட்ராமன், 36-ஆவது வாா்டு அவைத் தலைவா் நல்லேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.