கரூர்

கரூரில் சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில், தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு மற்றும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.மரகதம் தலைமை வகித்தாா். பொருளாளா் இந்திராகாந்தி, செயலாளா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கரோனா தடுப்பூசி போடும் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்படுத்தி தரவேண்டும், தடுப்பூசி போடும் போது சமூக விரோதிகள் காழ்ப்புணா்ச்சியுடன் தாக்குதலில் ஈடுபடுவதை தடுக்க காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியில் அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். தடுப்பூசி போடும் பணி தொடா்பாக கணக்கெடுப்பு பணியை செய்யச் சொல்லி மிரட்டுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுகாதார செவிலியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT