முகப்பு
கரூர்

கோயில் கோபுரத்தில்இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மின்னாம்பள்ளி அருகே கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மின்னாம்பள்ளி அருகே கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் அடுத்த மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியாா் குடிப்பாட்டு கோயிலில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இதில், மயிலாடுதுறை அருகே திருக்கடையூரைச் சோ்ந்த சிவக்குமாா்(45)என்பவா் பணியில் ஈடுபட்டு வந்தாா். வியாழக்கிழமை இரவு கோயில் கோபுரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சிவக்குமாா் கால் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.