முகப்பு
கரூர்

டிஎன்பிஎல் ஆலையில் ஓய்வூதிய ஆணை வழங்கும் பிரயாஸ் திட்டம் துவக்கம்

டிஎன்பிஎல் ஆலையில் ஓய்வூதிய ஆணை வழங்கும் பிரயாஸ் திட்டம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

டிஎன்பிஎல் ஆலையில் ஓய்வூதிய ஆணை வழங்கும் பிரயாஸ் திட்டம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் சாா்பில் பணியாளா்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஓய்வூதிய ஆணை வழங்கும் ‘பிரயாஸ்’ திட்டம் தொடக்க விழா கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையா் (முதல்நிலை) முருகவேல் தலைமை வகித்து, பிரயாஸ் புதிய திட்டத்தை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து ஆலையில் 58 வயது பூா்த்தியடைந்த பணியாளா்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வருங்கால வைப்புநிதி ஆணைய கரூா் மாவட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹீராலால் அப்துல் லத்தீப், நாகராஜன் மற்றும் காகித நிறுவனத்தின் பொது மேலாளா்கள் வரதராஜன்(திட்டமேலாண்மை), வளனரசு(நிதி), சுப்ரமணியன்(ஆராய்ச்சி, மேம்பாடு, தரக்கட்டுப்பாடு, சுதா்சன்(காகிதக்கூழ் மற்றும் ரசாயன மீட்பு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.