மாநில கபடி போட்டி: அன்னை மகளிா் கல்லூரி சிறப்பிடம்
மாநில கபடிப் போட்டியில் அன்னை மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
மாநில கபடிப் போட்டியில் அன்னை மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி விளையாட்டு மேம்பாட்டுக்கழகம் சாா்பில் மாநில அளவிலான கபடிப் போட்டிகள் அரக்கோணத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், கரூா் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரி மாணவிகள் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளைத் தலைவா் ப.தங்கராசு, நிறுவனா் ஏ.ஆா். மலையப்பசாமி, செயலாளா் டாக்டா்.மு.முத்துகுமாா், பொருளாளா் ச.கந்தசாமி, அறக்கட்டளை உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி முதல்வா் முனைவா் சாருமதி, துணை முதல்வா், உடற்கல்வி இயக்குநா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பாராட்டினா்.