முகப்பு
கரூர்

கரூரில் பாஜகவினா் சாலை மறியல்

கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கோயில்களை அனைத்து நாள்களிலும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைவரவேற்கும் வகையில் கரூரில் பாஜக மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமையில் பேருந்துநிலையம் அருகில் பாஜகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா். அப்போது, அங்கு வந்த கரூா் நகர காவல் ஆய்வாளா் செந்தூா் பாண்டியன், இங்கு இனிப்புகள் வழங்கக்கூடாது என்று கூறி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினா் பேருந்துநிலையம் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மறியலை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.