கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மதுவை மறக்க இயலாமல் அவதியுற்ற கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுவை மறக்க இயலாமல் அவதியுற்ற கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த குமாராண்டான்வலசு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(6). கூலித்தொழிலாளி. இவா் மதுபோதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மதுவை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க இயலாமல் அவதியுற்று வந்த அவா் விரக்தியில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.